Saturday, March 4, 2017

ஆலய நிர்வாகிகள் அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் (1973)


ஸ்ரீவ்யாஸ பாரத கலாதி ஸதஸ் ஸமாஜம், 
ஸ்ரீமடம், காஞ்சீபுரம்  (1973-74) 

ஸ்ரீபெரிவாளின் திருவுளப்படி ஸ்ரீமடத்தின் மூலமாக 1962ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வ்யாஸ பாரத கலாதி ஸதஸ் நிகழ்வுகளின்போது வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், பல்துறைக் கலைகள் ஒவ்வொன்றிலும் வல்லோரைக் கௌரவித்து அவர்களின் புலமையை உலகறியச் செய்யும் அரும்பணியை ஆற்றிவருகிறது ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் வ்யாஸ பாரத கலாதி ஸதஸ் ஸமாஜம். 
1962 முதல், ஒவ்வோராண்டும் ஸதஸ் நிகழ்வுகள் பற்றிய சிறப்பு மலரும் ஸமாஜத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாராணஸீ ப்ரஹ்மஸ்ரீ P.N.பட்டாபிராம சாஸ்த்ரிகள், சிதம்பரம் ப்ரஹ்மஸ்ரீ ராமலிங்க தீக்ஷிதர், தர்மபுரம் சிவஸ்ரீ ஸ்வாமிநாத சிவாசார்யர், திருவாவடுதுறை சிவஸ்ரீ ஸ்வாமிநாத சிவாசார்யர், அல்லூர் சிவஸ்ரீ விச்வநாத சிவாசார்யர், திருவாடாணை சிவஸ்ரீ ஐயாமணி சிவாசார்யார், காஞ்சி சிவஸ்ரீ இஷ்டஸித்தி ஏகாம்ரகுருக்கள், மீஞ்சூர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ சேஷ பட்டாசார்யார், திருவில்லிபுத்தூர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அலங்கார பட்டாச்சார்யார், கணபதி ஸ்தபதியார், பழனி செல்லக்கண்ணு ஸ்தபதியார், தொண்டர்குலசேகரன் என்று ஸ்ரீபெரீவா அவர்களால் சிறப்பிக்கப்பட்ட கம்பன் அடிப்பொடி. சா.கணேசன், ஸ்ரீ T.M.P. மஹாதேவன், சிவஸ்ரீ வஜ்ரவேலு முதவியார், மயிலம் சிவஸ்ரீ சிவசுப்ரமணியன், புலவர் வெங்கடேசன் போன்ற அநேக வேத ஆகம சில்ப சாஸ்த்ர நிபுணர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டும், அவ்வப்போது எழும் சர்ச்சைகள் குறித்து ஸ்ரீ ஆசார்ய சுவாமிகள் அவர்களின் திருமுன்னிலையில் விவாதித்தும் அவர்களின் முடிவான கருத்துக்களை ஏற்றும் வந்துள்ளனர்.
தமிழக வரலாற்றில் முதன்முதலாக ஒரு வாரகாலத்திற்கு க்ராமக் கோயில் பூசாரிகளுக்கு வழிபாட்டுப் பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் அளிக்கும் அரும்பணியை ஸ்ரீமடம்தான் இந்த ஸமாஜம் வாயிலாகத் தொடங்கியது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறை வேண்டுகோளுக்கிணங்கி, ஸ்ரீபெரிவாளின் அருளாணைப்படி, இந்த ஸமாஜத்தின் வாயிலாகத்தான் நூற்றுக்கணக்கான வேத சிவாகம வித்யார்த்திகளைத் தயார் செய்த அல்லூர் வேத சிவாகம பாடசாலை துவங்கி நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது ..
ஒவ்வோராண்டும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட துறையின் பொறுப்பான அதிகாரிகளையும் இந்த ஸதஸ் நிகழ்வுகளின்போது பங்கேற்க வைப்பதன் மூலம் நமது மதம், கலாசாரம் மற்றும் பண்பாடு சம்பந்தமான விஷயங்களை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டு.. பழமை மாறாது திருப்பணி செய்வித்தல் மற்றும் திருக்கோயில் வழக்கங்களை மரபு மாறாமல் காத்து வர அவர்களை ஊக்குவித்து வந்துள்ளதும் முக்யமானதாகும்.
ஆலய நிர்வாகிகள் அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் 1973ம் வருடத்திய ஸதஸில் வெளிட்ட அருளாணை தற்போது வெளியிடப்படுகிறது



No comments:

Post a Comment