" என் தம்பி சாச்சுவுக்கு மூணு பாஷையும் தெரியும்.."
ஸ்ரீஸார் அவர்கள் கும்பகோணத்தில் ஸஞ்சரித்து வந்தபோது.. சில நேரங்களில் ஸ்ரீமடத்தின் மேற்பால் இருக்கும் தோட்டத்தில் தனித்திருப்பார்கள்.
அதேவிதமாக அணிற்பிள்ளைகள் ஆங்காங்கிருந்து ஓடிவந்து ஸ்ரீஸார் அவர்கள் அன்புடன் தரும் உணவை எடுத்துக்கொள்ளும் ..
காவிரிக்கரையருகில் உயரத்தில் பறக்கும் கருட பக்ஷிகள் கூட.. ஸ்ரீஸார் அவர்கள் கையைக் காட்டி அழைத்ததும் கீழிறங்கி வந்து அமர்வதை அனைவரும் வியப்புடன் பார்த்துள்ளனர்..
"என் தம்பி சாச்சுவுக்கு (ஸ்ரீஸார் அவர்களின் இல்லப் பெயர்) மனுஷாள் பாஷை, பக்ஷி பாஷை, மிருக பாஷை என்னும் மூணு பாஷையும் தெரியும் " என்று ஸ்ரீபெரீவா அவர்கள் கூறினதாக ஆரூரனிடம் ஒருசமயம் ஸ்ரீஸார் சொல்லியிருக்கிறார்கள் ..
Periyavaa saranam.
ReplyDeleteHara Hara sankara.
Jeya Jeya Sankara.