ஸ்ரீராமக்ருஷ்ண பரமஹம்ஸரின் சரிதம் மற்றும் அவரின் கதைகளில் ஸ்ரீசார் அவர்களுக்கு ரொம்ப இஷ்டம் உண்டு.. சிஷ்யர்கள் அடிக்கடி இவற்றை அவர்களிடம் படித்துக் காட்டியபடி இருப்பது வழக்கம்..
ஒருநாள், ஸ்ரீம.(ஸ்ரீமஹேந்த்ர நாதர்) என்னும் அணுக்கத்தொண்டர் ஸ்ரீபரமஹம்ஸரின் உடனிருந்து அவ்வப்போது நிகழ்ந்தவற்றை எழுதி வைத்து வந்திருப்பது பற்றி பேச்சு வந்தது..
அப்போது.. ஸ்ரீசார் அவர்களின் சொல்லமுதத்தையும் அவ்வப்போது எழுதி வைத்துக்கொள்ள வேணும் என்று ஆரூரன் ப்ரார்த்தித்தவுடன் ..
ஸ்ரீசார் அவர்கள் புன்சிரிப்புடன் தன்னருகில் இருந்த ஒரு டைரியை எடுத்து .. தம் திருக்கரத்தால் பெயரை எழுதிக் கொடுத்து ..
ஸ்ரீசார் அவர்களின் திருமுன்னிலையில் அன்றாடம் நிகழ்வனவற்றையும், அவர்கள் சொல்வனவற்றையும் எழுதிக்கொண்டுவரப் பணித்தருளினார்கள்..
.
.
சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆரூரனின் டயரி குறிப்புகளை ஸ்ரீசார் அவர்களும் திருக்கண்சார்த்தி வந்தார்கள். 1992ம் ஆண்டு ஜூன் மாசம் 27ம் தேதி முதல் இந்தக் குறிப்புகள் எழுதிவரப்பட்டன...
ஸ்ரீசார் அவர்கள் தொடர்பான சம்பவங்கள், அவர்களின் அருள்வாக்காக மலர்ந்தவை மட்டுமின்றி... ஸ்ரீபெரீவா அவர்களின் பூர்வாச்ரம பெற்றோர் மற்றும் குடும்ப நிகழ்வுகள், அவர்களின் இளமைப் பருவம், அவர்கள் ஜகதாசார்யாளாகப் பட்டமேற்ற பிறகு நடந்தவை என ஏராளமான சம்பவங்கள் ..
இவை தவிர, ஸத்குரு ஸ்ரீசார் அவர்கள்.. அடிப்படை ஆத்மீகம் மற்றும் வாழ்வியல் முறைகள் பற்றியும் குழந்தைக்கு அவ்வப்போது புகட்டி வந்துள்ளனவும் இந்த நோட்டு புஸ்தகத்தில் இடம்பெற்றுள்ளன..
Sivan Sar ThiruvadigaLe CharaNam!
ReplyDelete