தக்கயாகப் பரணியில்...
மஹாகாளி, கூளிகள் புடைசூழக் களம் கண்டு, கூழடக் கட்டளையிட்டருளுதலும்.. அதன்படியே பேய்க்கணங்கள் களத்தில் உள்ளவற்றைச் சேகரித்துக் கூழடுதலும்.. அவ்வாறு அட்ட கூழை இறைவிக்குப் படைத்தலும் விரிவாகக் காண்கின்றன.
சோறு செய்த மிடாக்களின் மீது.. ஈசன் நெற்றிக்கண்ணில் மலைகள் வெந்து பூத்ததால் உண்டான திருநீற்றை வாங்கிப் புண்டரமாக இடும்படி கணங்களுக்கு மஹாகாளி கட்டளையிடல் தக்கயாகப் பரணி - 750ம் தாழிசையில் சொல்லப்படுகிறது..
" புண்டர மிடுகையாவது சோறு சமைத்த மிடாக்களுக்குப் பிவாயமிடுகை " என்கிறார் ஒட்டக்கூத்தரின் சமகாலத்தவரான பரணியுரையாசிரியர்..
அக்காலத்திலும், சோறு சமைத்த மிடாக்கள் - பானைகளுக்குத் திருநீற்றால் குறியிட்டு வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
இதைப் பிவாயம் என்பர்.
No comments:
Post a Comment