திருக்கோயில்களில் பராமரிக்கப்படும் யானைகள் பற்றி நிறையவே தற்காலத்தில் பேசப்பட்டுவருகின்றன...யானை கட்டப்பட்டிருக்குமிடம் பற்றித்தான் பெரும்பாலும் சர்ச்சை செய்யப்படுகிறது..
யானைகள் கட்டப்பட்டிருக்கும் இடத்தின் தரைத்தளம் கருங்கல்லானால் அது பற்றிப் புகார்.. அதுவே செங்கல்லானால் அதற்கொரு புகார்.. "அடசரிப்பா.. மண்ணில் கட்டி வைத்துக்கொள்கிறோம்" என்றால்.."அதுதான் பெரிய மிருகவதை.." என்று ஒரேயடியாகக் கத்திக்கொண்டு அதற்கும் தனிப் புகார் தயாரித்துத் தள்ளிய வண்ணம் இருக்கிறது அந்நிய கோஷ்டி..
இவர்கள் சொல்வது தவறு என்று மூதரிக்க எவ்வித ஆதாரமும் அரசாங்கம் அல்லது ஆலய நிர்வாகங்களின் கைவசம் இல்லை..எந்தத் தரையில்தான் யானையைக் கட்டிவைத்துக் கொள்வது என்பதில் இதுவரை கருத்தொற்றுமையில்லை .. விஷயம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது..
மயமதம் என்னும் பழம் நூலில் "கஜசாலையின் தளமானது ஒரு முழம் கனமுடைய பலகைகளினாலே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.. தளவரிசை செங்கல் மற்றும் கருங்கல்லினால் அமைத்தல் கூடாது .."
(II -182, 188) என்று தீர்மானமாகக் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது ..
(II -182, 188) என்று தீர்மானமாகக் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது ..
யானைகள் பற்றி நீதிமன்றத்தில் கேஸ் போட்டிருக்கும் விலாங்குகளுக்கோ அல்லது எதிர் தரப்பிற்கோ.. யானைகளின் பராமரிப்பு, அமைவிடம் இவற்றையெல்லாம் பற்றி அழகுறச் சொல்லும் பண்டைய கஜசாஸ்த்ரம் மற்றும் பிற புஸ்தகங்கள் பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
பாஷைகள் மேல் விரோதம் கொண்டோம் பழைய நுல்களையும் தொலைத்தோம்.. அறிஞர்களை அவமதித்தோம் .. இப்போது நாட்டுப்பசு ..கோயில் யானைகள் ... பழைய கட்டுமானங்கள் பாதுகாப்பு என்று கோர்ட்டுக்கும் கச்சேரிக்கும் அலைந்து கொண்டிருக்கிறோம் ..
தமிழகம் .. இனிமேலாவது விழித்துக்கொள்வது நல்லது !
No comments:
Post a Comment