Friday, July 8, 2016

கனச்யாம பண்டிதர்




தஞ்சை ஸரஸ்வதி மஹாலயத்தில் பணியாற்றிய ஸம்ஸ்க்ருத பண்டிதர் ஸ்ரீநிவாஸன் ..
தஞ்சையை ஆண்ட ஸாஹராஜரின் ஸஹோதரர் முதலாம் சரபேந்த்ர ராஜரின் (சரபோஜி-I) சரித்ரத்தைப் பற்றி எழுத முனையும் எவரும் ஸ்ரீனிவாசன் அவர்களை பற்றிக் குறிப்பிடாமலிருக்க முடியாது.. 

வேண்டினால், அவ்வப்போது காரைக்கால் வருவார்.. எங்களுடன் சில காலம் தங்குவார்.. அப்போது மராட்டிய மன்னர்களின் அவைக்களப்  புலவோர் பலரின்   சரித்ரங்களையும், அவர்களது காவ்யங்களின் உயர்வையும் சுவைபடச்  சொல்வார்.. அருமையாகப் பாடுவார்.. சிறந்த ஹரிகதை விற்பன்னர்.. தஞ்சாவூர்ப்  பாணியில்    ரஸமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, ஹிந்தி, ஸம்ஸ்க்ருத மொழிப்  பாடல்களுடன்..  ஹாஸ்யத்துடன் மழையெனப் பொழிவார்.. 

அவர் சொன்னவற்றுள் சிலதை  பதிவாக்கத் தோன்றியது..

கனச்யாம பண்டிதர் ..  

கலைவாணியின் அருளை  முழுதாகப் பெற்றவர் கனச்யாம பண்டிதர். 


ஸம்ஸ்க்ருதத்தில் அறுபத்து நான்கு ப்ரபந்தங்களையும்,  ப்ராக்ருதத்தில் இருபது   நூல்களையும், பிற மொழிகளில் இருபத்தைந்து நூல்களையும் எழுதியவர் .. தம் இருபதாவது வயதில் "மதனஸஞ்சீவன பாணம்"  நூலையும், இருபத்திரெண்டாவது வயதில் நவக்ரஹ சரித்ரத்தையும் இயற்றியவர். 

தஞ்சையை  ஆண்ட  முதலாம் துளஜா மஹாராஜரின்  அரசவைப்  பண்டிதர்.
                           
                                   .


ஒரே இரவில் க்ருஷ்ணமிச்ரரின்     ப்ரபோதசந்த்ரோதயம்  நாடகத்திற்கு   உரை எழுதினாராம் கனச்யாம பண்டிதர்.  

வித்தசாலாபஞ்சிகா என்ற  நாடகத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை என்னும் உரையை மூன்றே மணி நேரத்தில் எழுதித் தள்ளிவிட்டாராம் .. 


இவருக்கு தமையன் ஒருவர்... அவர் ஸந்யாசியாகி, சிதம்பரகுரு என்ற நாமம் தாங்கி  தேவீ பட்டணத்தில்  இருந்தாராம் ..

கனச்யாம பண்டிதரின் மனைவியர்  இருவர் ஸுந்தரீ , கமலா என்பார். 


மூன்றே மணி நேரத்தில் தம் கணவர் எழுதிய உரையை அநுஸரித்து, பண்டிதரின் மனைவியர் ஸுந்தரியும், கமலாவும்  சேர்ந்தே மற்றோரு உரையையும்  பிற்பாடு எழுதிப் பெரும் புகழ் பெற்றனராம்..

கனச்யாமரின்  புதல்வர் சந்த்ரசேகரரும் தகப்பனாரைப் போன்றே பெரும் புலமை வாய்ந்தவரே..




..மீண்டும் சொல்லுவோம்.... 


No comments:

Post a Comment