Saturday, June 25, 2016

தூயவர் மேன்மையை மிகைப்படுத்தும் சீடர்கள்...


ஸத்குரு ஸ்ரீசிவன் ஸார் அவர்களுடன் இருந்த சமயத்தில்.. ஒரு நாள் நண்பருடன் அந்த ப்ரபல உபன்யாஸகரின் நிகழ்ச்சிக்குப் போய் வந்தோம்..
இரவு வெகு நேரம் கழித்து நாங்கள் திரும்பி வரும்வரையிலும் ஸ்ரீஸார் எங்களுக்காகக் காத்திருந்தார்கள்..
ஸ்ரீஸார் அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "தாமதமாகிவிட்டது ஸார் " என்று மன்னிப்பைக் கோரினார் நண்பர்..
உடனே ஸ்ரீஸார் ..
" தாமதமானால் பரவாயில்லை .. கதை கேட்கப் போயிருந்தேளே .. அவன் ஸ்வாமியைப் பத்தி கதை சொன்னானா .. அல்லது கதை விட்டானா .. அதை முதலில் எனக்கு சொல்லு ! "
என்று புன்முறுவலுடன் கேட்டார்கள்..
பிறகு ஸ்ரீஸார் ஆரூரனைப் பார்த்து அவர்கள் எழுதிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் புஸ்தகத்தில் ஒரு பக்கத்தில் இருந்த -
"தூயவர் மேன்மையை மிகைப்படுத்தும் சீடர்கள் பாமரன்"
" போலியையும் அஸலையும் ஒன்றாகப் போற்றுபவர்கள் பாமரன்"
என்னும் வரிகளைச் சுட்டிக் காட்டி வாசிக்கச் சொன்னார்கள்..
....
ஸ்ரீபெரீவாளின் திவ்ய சரித்ரம் .. மஹிமைகளைப் பற்றி அநேக புஸ்தகங்களும்.. பகிர்வுகளும் மழைபோலத் தொடர்ந்த வண்ணம் உள்ளன..
இவரைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு .. அன்று ஸ்ரீஸார் போட்ட கேள்விதான் நினைவுக்கு வருகிறது..
சமீப காலமாக , பக்தி அல்லது ஆர்வம் காரணமாக நடக்காத சம்பவங்களையோ அல்லது ஸ்ரீயவாளின் வாழ்வுக்கும் , வாக்குக்கும் முரணானவற்றையோ ஸ்ரீமடத்திற்கே தொடர்பற்ற சிலர் அச்சுப் போடுவதும்.. உபந்யஸிப்பதும்..
தொடர்ந்து பலர் அவற்றை முகநூலில் வித்யாசமான தலைப்புகளை போட்டு.. காபி.. பேஸ்ட் செய்து வெகுஜன விநியோகம் செய்வதும்...
..ஸ்ரீயவாளையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்ந்து வரும் பல எளிய பக்த ஜனங்களை பெரிதும் வருந்தச் செய்துள்ளது..
இன்று காலை "மஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்." என்று நம்மை அதிரவைக்கும் திடுக்கிடும் தலைப்பிட்டு ஒரு மேட்டரைப் பதிவிட்டிருக்கிறார் ஒரு நண்பர்..
சமயங்களில் இவற்றையெல்லாம் படிக்க வேணுமா .. என்றும் தோணுகிறது..
ஏற்கனவே ஸ்ரீசங்கர பகவத்பாதாள் காலம் மற்றும் அவர்கள் ஸ்தாபித்த மடங்கள் விஷயத்தில் ஸ்ரீயவாள் பலகாலும் அழுத்தந்திருத்தமாகச் சொல்லிவிட்டிருக்கும் உண்மைகளுக்கு மாறாக மனம்போன போக்கில் உளறிவைக்கும் இவர்களால் ஸ்ரீமடத்திற்கும்.. சிஷ்யாளுக்கும்,.. உண்மைக்கும் .. பிற்காலங்களில் ஈடு செய்ய முடியாத இழப்பே ஏற்படும்..
நவீன எழுத்தாளர்கள் .. ஸ்ரீயவாள் பற்றி எழுதும் முன் .. ஸ்ரீமடத்திற்குச் சென்று ஸ்ரீசந்த்ரமௌளீச்வரரை வணங்கி, அதிஷ்டானங்களை தரிசித்து, ஸ்ரீமதாசார்யர்களை நமஸ்கரித்து ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு , மனமுருகி பிரார்த்தனை செய்து..
..அங்குள்ள அதிகாரிகளிடமும், பெரியோர்களிடமும் உங்களது நோக்கம் பற்றித் தெரிவித்து .. ஸ்ரீமடம் பற்றியும், ஸ்ரீயவாளைப் பற்றியும் விஷயங்களை நன்கு கேட்டறிந்து.. பதிவு செய்து கொண்டு ..
..எழுதிய பின் தக்கவர்களிடம் சரிபார்த்து பின் வெளியிட்டால் நல்லது ..
ஏதோ எளியவர்களின் மனத்திற்குப் பட்டதைச் சொல்லிவைக்கிறோம்..
..மற்றவை எசமான் திருவுள்ளம்...

1 comment:

  1. அண்ணா ரா.கணபதியையே மஹாபெரியவா தம் ஜீவிய சைதத்தை எழ்யஉத அனுமதிக்கவில்லை. 'பூரணத்துக்கு' அப்புறம் எழுதளாம் என்று உத்தரவாகியது. இறுதிவரை கணபதி அண்ணா எழுதிய மஹா பெரியவா சரித்திரம் நமக்குக் கிடைக்கவில்லை. சிறு புத்தகங்களாக மஹாபெரியவா சொல்லிக் கேட்டுக் கொண்டு அவர் அருளியது அண்ணா எழுதி நமக்குக் கிடைத்தது.பலரும் பலதையும் எழுதுகிறார்கள். உண்மையானது மஹாபெரியவா அருள்படி பக்தர்களுக்குப் போய்ச் சேரட்டும்! ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர! நிறைய உங்கள் அனுபவங்கள் எழுத வேண்டும்!

    ReplyDelete