ஸ்ரீச்ருங்ககிரி மடத்தின் 25வது ஆசார்யர், ஸ்ரீஸச்சிதானந்தபாரதீ ஸ்வாமிகள் அவர்கள் ச்ருங்கேரி குருபரம்பரையைப் பற்றி " குரு சதகம் " (100+20 ச்லோகங்கள்) என்னும் உயர்ந்த நூலை இயற்றியுள்ளார். இதற்கு லக்ஷ்மண சாஸ்த்ரி என்பார், ஸ்ரீஸ்வாமிகள் அவர்களின் காலத்திலேயே உயர்ந்ததான ஒரு வ்யாக்யானமும் செய்திருக்கிறார். இதில் ஸ்ரீசங்கரபகவத்பாதர்களைப் பற்றிய 30 ச்லோகங்களும் உள்ளன.
ஸ்ரீஸச்சிதானந்தபாரதீ ஸ்வாமிகள் ச்ருங்கேரி குருபரம்பரையில் வரும் ஆசார்யர்கள் பலரையும் வரிசைக்ரமத்தில் நமஸ்கரித்துவிட்டு ஸ்ரீவித்யாரண்யர் பற்றி
यस्य चान्दोलिकादण्ड एकदो मानुषैर्धृत : I
एकदो भूतवेतालै: तस्मै श्रीगुरवे नम : II
யஸ்ய சாந்தோலிகாதண்ட ஏகதோ மானுஷைர்த்ருத: I
ஏகதோ பூதவேதாளை: தஸ்மை ஸ்ரீகுரவே நம: II
என்னும் ச்லோகத்தால், ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளின் பல்லக்கினை ஒருபுறம் மனிதர்களும் , மறுபுறம் பூத வேதாளங்களும் ஏந்திவந்த அருங்காட்சியை வியந்து சொல்லி நமஸ்கரிக்கிறார்..
ஸ்ரீவித்யாரண்யர் " ச்ருங்கி " எனப்படும் பிரம்ம ராக்ஷஸின் துணையுடன் காசிக்குச் சென்று அங்கு உருமாறி இருந்த ஸ்ரீவேதவ்யாஸரைத் தரிசித்தனர்.
பின்னர், ச்ருங்கி தமக்குச் செய்த பேருதவிகளுக்காக, தாம் ஸ்தாபித்த அனைத்து மடங்களிலும் "மலையாள ப்ரம்மா " எனப்படும் ச்ருங்கிக்கு தனி வழிபாடுகள் நடக்கும்படி ஏற்படுத்தினார் எனவும் ச்ருங்கேரி குருவம்சகாவ்யம், வித்யாரண்ய காலஞானம், ரேணுகாதந்த்ரம் உள்ளிட்ட பல நூல்களிலும் காண்கிறது.
ஸ்ரீவித்யாரண்யர் காஞ்சி க்ஷேத்ரத்தில் அவதரித்து, தம் முதிர்ந்த பிராயத்தில், ஸ்ரீசங்கராசார்யர், ஸ்ரீப்ருத்வீதராசார்யர் ஆகியோரின் ஸித்தி ஸ்தலமான காஞ்சிக்கே மீண்டும்திரும்பி ஸ்ரீகைலாஸநாதர் ஆலயத்தில் ஸித்தியடைந்தனர் என்று புஷ்பகிரி மடாம்னாய ஸ்தோத்ரம் மூலம் அறிகிறோம்.
No comments:
Post a Comment