ஸ்ரீஸ்காந்த புராணம் நாகர கண்டம் கமலாலய க்ஷேத்ர மாஹாத்ம்யத்திற் சொல்லியுள்ளபடி திருவாரூர் ஸ்தலத்தை பஞ்சக்ரோச ப்ரதக்ஷிணம் செய்யும் முறை..
கமலாலயத் திருக்குளத்தில் இருக்கும் 64 தீர்த்த கட்டங்களிலும் படிந்து, ஆரூர் ஆதியை வணங்கி வலமாக ..
கிழக்கில் கயா சீர்ஷம் என்னும் ராமகே (கேக்கரை),
தெற்கில் தக்ஷிண கோகர்ணம் என்னும் புலிவலம் (வ்யாக்ர ப்ரதக்ஷிணம்),
மேற்கில் க்ருஷ்ணமங்கள க்ஷேத்ரம் என்னும் திருக்கண்ண மங்கை ,
வடக்கில் உத்தர கோகர்ணம் என்னும் வண்டாம்பாலை
(விறன்மிண்டர் கதையில்.. த்யாகேசர் தாண்டிக் குதித்தபடித் தாம் திருவாரூர் எல்லைக்குள் வந்து விட்டதை "வந்தோம் இப்பாலே" என்று சொல்லிய இடம்) ..
இப்படியாக வலம் வந்து திருவாரூர் அடைந்து
அசலேசம், ஹாடகேசம், ஆனந்தேசம், சித்தீசம், வன்மீகர், வீதிவிடங்க த்யாகர், கமலாம்பிகை, அல்லியங்கோதை உள்ளிட்ட மூர்த்திகளை வணங்கி, அடியார்களுக்கு விதிப்படி தானங்களை அளித்து பஞ்சக்ரோச யாத்திரையைப் பூர்த்தி செய்ய வேண்டியது...
எஜமானர்களின் திருவாணைப்படி பூஜ்யஸ்ரீ ஓடாச்சேரி ஸ்வாமிகள் அவர்கள் இயன்றபோதெல்லாம் அடியவர்களைச் சேர்த்துக்கொண்டு நாகர கண்டத்தைச் சொல்லியபடியே இப்படி வலம் வருவார்..
தன்னுடைய மாட்டைத் தேடிக்கொண்டு போன ஒருவன்..
தான் அறியாமலே சமத்காரபுரம் என்னும் இந்த நகரத்தின் பஞ்சக்ரோச எல்லையைச் சுற்றி வந்ததாலேயே பெரும் புண்ணியம் அடைந்து தனது அடுத்த ஜன்மத்தில் மன்னனாகப் பிறந்தான்..
ஸ்ரீதூர்வாஸ மஹாமுனிவர் இங்கு வந்து...
பஞ்சக்ரோச எல்லைக்குள்ளாக 'ஸ்ரீபுரம்' என்னும் அழகிய நகரத்தை ஏற்படுத்தி, அதைச் சுற்றிலும் மஹாபத்மாடவியை அமைத்து, அதனுள் ஸ்ரீகமலாம்பிகையை எழுந்தருளவைத்து விதிப்படி பூஜித்தனர் என்பது வரலாறு..

No comments:
Post a Comment