Monday, September 5, 2016

" துளஸீயால் அம்பாளை அர்ச்சிக்கலாமா?"




" துளஸீயால் அம்பாளை அர்ச்சிக்கலாமா?" என்று நண்பர் ஒருவர்  கேள்வி ஒன்றைப் போட்டார்..

துளஸீயால் அம்பாளை அர்ச்சிப்பது  விலக்கப்பட்டிருக்கிறது..

ஆனால் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தின் உத்தர பாகம் - பலச்ருதிப் பகுதியில் ..


   ஏபிர்  நாம ஸஹஸ்ரைஸ்து 
        ஸ்ரீசக்ரம் யோர்ச்சயேத் ஸக்ருத் |
  பத்மைர் வா  துளஸீ  புஷ்பை :
       கல்ஹாரைர்  வா கதம்பகை : | 52

தாமரை புஷ்பங்கள் அல்லது துளஸீயின் புஷ்பங்கள் அல்லது செங்கழுநீர் புஷ்பங்கள் .. முதலான நல்ல மணமுள்ள   புஷ்பங்களைக் கொண்டு   ஸ்ரீசக்ரத்தை  தேவியின் ஆயிரம் நாமங்களால் அர்ச்சிப்பதன்  பலன்  பற்றி சொல்லப்பட்டுள்ளது.

துளஸீயால் அம்பாளை அர்ச்சிப்பது கூடாதென  விலக்கப்பட்டிருக்கும்போது...  ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தின்  பலச்ருதியில்  மட்டும் - எங்ஙனம்   துளஸீயால் அர்ச்சனை  செய்வதைப்  பற்றிக் கூறப்பட்டுள்ளது என்பதே கேள்வி

" துளஸீ " என்றால் பொதுவாக துளஸீ  தளங்களையே நாம்  குறிப்பிடுவது வழக்கம்.  இந்த ச்லோகத்தில் துளஸீயின் புஷ்பங்களால்தான்   ஸ்ரீசக்ரத்தை அர்ச்சனை  செய்யச் சொல்லியிருக்கிறது. துளஸீயின்   தளங்களைக் கொண்டு அர்ச்சனை  செய்யச் சொல்லவில்லை.  

ஆக,  விலக்கு  என்பது இந்த இடத்தில் துளஸீ தளங்களுக்குத்தானேயன்றி துளஸீயின் புஷ்பங்களுக்கல்ல.

ஆனால்,  நீலா தந்த்ரம் போன்ற  வெகு சிலவற்றில்  குறிப்பிட்ட சில கார்யங்களின் ஸித்திகளுக்காக  விலக்கப்பட்டிருக்கும் துளஸீ முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டுள்ளனர் என்று G.V. கணேசய்யர் முதலியோரின் கருத்து.

இது சிறப்பு விதியேயன்றி பொது விதியல்ல..

அடுத்த கேள்வி .. துளஸீ  பூக்குமா..?..   நன்றாகப்  பூக்கும் ..

ஆனால்  பகலில்  துளஸீயின் புஷ்பங்களைச் சேகரிப்பது  கொஞ்சம்  ச்ரமமான வேலை .. ஸந்த்யா காலத்தில்  பறிப்பது  சற்று எளிது..






ராம துளஸீயின்   புஷ்பங்கள்  மிக அரிதாகவே  கண்ணில் படும்... 

தும்பைப்பூவைப் போல மிகச்சிறியதாக வெண்ணிறத்தில் இருக்கும்.













க்ருஷ்ண  துளஸீயின் புஷ்பம் கருமை கலந்த பழுப்பாக இருக்கும்..

















தென்கிழக்காசிய  துளஸீ  வகைகளில்  எலுமிச்சைத்  துளஸீ  
என்று ஒரு ஜாதீ  உண்டு..  
நூற்றுக் கணக்கில் புஷ்பித்துக் குலுங்கும்  ..  
செடியருகில்  சென்றாலே 
நிறைந்த மணம்  வீசும்..  




இதைப் போன்ற  துளஸீ புஷ்ப வகைகளை  ஸ்ரீசக்ரபூஜைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


                   

                                      

1 comment:

  1. Great information. Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

    ReplyDelete