Sunday, July 17, 2016
Thursday, July 14, 2016
Tuesday, July 12, 2016
Friday, July 8, 2016
ச்ருங்கி - மலையாள ப்ரம்மா
ஸ்ரீச்ருங்ககிரி மடத்தின் 25வது ஆசார்யர், ஸ்ரீஸச்சிதானந்தபாரதீ ஸ்வாமிகள் அவர்கள் ச்ருங்கேரி குருபரம்பரையைப் பற்றி " குரு சதகம் " (100+20 ச்லோகங்கள்) என்னும் உயர்ந்த நூலை இயற்றியுள்ளார். இதற்கு லக்ஷ்மண சாஸ்த்ரி என்பார், ஸ்ரீஸ்வாமிகள் அவர்களின் காலத்திலேயே உயர்ந்ததான ஒரு வ்யாக்யானமும் செய்திருக்கிறார். இதில் ஸ்ரீசங்கரபகவத்பாதர்களைப் பற்றிய 30 ச்லோகங்களும் உள்ளன.
ஸ்ரீஸச்சிதானந்தபாரதீ ஸ்வாமிகள் ச்ருங்கேரி குருபரம்பரையில் வரும் ஆசார்யர்கள் பலரையும் வரிசைக்ரமத்தில் நமஸ்கரித்துவிட்டு ஸ்ரீவித்யாரண்யர் பற்றி
यस्य चान्दोलिकादण्ड एकदो मानुषैर्धृत : I
एकदो भूतवेतालै: तस्मै श्रीगुरवे नम : II
யஸ்ய சாந்தோலிகாதண்ட ஏகதோ மானுஷைர்த்ருத: I
ஏகதோ பூதவேதாளை: தஸ்மை ஸ்ரீகுரவே நம: II
என்னும் ச்லோகத்தால், ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகளின் பல்லக்கினை ஒருபுறம் மனிதர்களும் , மறுபுறம் பூத வேதாளங்களும் ஏந்திவந்த அருங்காட்சியை வியந்து சொல்லி நமஸ்கரிக்கிறார்..
ஸ்ரீவித்யாரண்யர் " ச்ருங்கி " எனப்படும் பிரம்ம ராக்ஷஸின் துணையுடன் காசிக்குச் சென்று அங்கு உருமாறி இருந்த ஸ்ரீவேதவ்யாஸரைத் தரிசித்தனர்.
பின்னர், ச்ருங்கி தமக்குச் செய்த பேருதவிகளுக்காக, தாம் ஸ்தாபித்த அனைத்து மடங்களிலும் "மலையாள ப்ரம்மா " எனப்படும் ச்ருங்கிக்கு தனி வழிபாடுகள் நடக்கும்படி ஏற்படுத்தினார் எனவும் ச்ருங்கேரி குருவம்சகாவ்யம், வித்யாரண்ய காலஞானம், ரேணுகாதந்த்ரம் உள்ளிட்ட பல நூல்களிலும் காண்கிறது.
ஸ்ரீவித்யாரண்யர் காஞ்சி க்ஷேத்ரத்தில் அவதரித்து, தம் முதிர்ந்த பிராயத்தில், ஸ்ரீசங்கராசார்யர், ஸ்ரீப்ருத்வீதராசார்யர் ஆகியோரின் ஸித்தி ஸ்தலமான காஞ்சிக்கே மீண்டும்திரும்பி ஸ்ரீகைலாஸநாதர் ஆலயத்தில் ஸித்தியடைந்தனர் என்று புஷ்பகிரி மடாம்னாய ஸ்தோத்ரம் மூலம் அறிகிறோம்.
கனச்யாம பண்டிதர்
தஞ்சை ஸரஸ்வதி மஹாலயத்தில் பணியாற்றிய ஸம்ஸ்க்ருத பண்டிதர் ஸ்ரீநிவாஸன் ..
தஞ்சையை ஆண்ட ஸாஹராஜரின் ஸஹோதரர் முதலாம் சரபேந்த்ர ராஜரின் (சரபோஜி-I) சரித்ரத்தைப் பற்றி எழுத முனையும் எவரும் ஸ்ரீனிவாசன் அவர்களை பற்றிக் குறிப்பிடாமலிருக்க முடியாது.. வேண்டினால், அவ்வப்போது காரைக்கால் வருவார்.. எங்களுடன் சில காலம் தங்குவார்.. அப்போது மராட்டிய மன்னர்களின் அவைக்களப் புலவோர் பலரின் சரித்ரங்களையும், அவர்களது காவ்யங்களின் உயர்வையும் சுவைபடச் சொல்வார்.. அருமையாகப் பாடுவார்.. சிறந்த ஹரிகதை விற்பன்னர்.. தஞ்சாவூர்ப் பாணியில் ரஸமான தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, ஹிந்தி, ஸம்ஸ்க்ருத மொழிப் பாடல்களுடன்.. ஹாஸ்யத்துடன் மழையெனப் பொழிவார்..
அவர் சொன்னவற்றுள் சிலதை பதிவாக்கத் தோன்றியது..
கனச்யாம பண்டிதர் ..
கலைவாணியின் அருளை முழுதாகப் பெற்றவர் கனச்யாம பண்டிதர்.
ஸம்ஸ்க்ருதத்தில் அறுபத்து நான்கு ப்ரபந்தங்களையும், ப்ராக்ருதத்தில் இருபது நூல்களையும், பிற மொழிகளில் இருபத்தைந்து நூல்களையும் எழுதியவர் .. தம் இருபதாவது வயதில் "மதனஸஞ்சீவன பாணம்" நூலையும், இருபத்திரெண்டாவது வயதில் நவக்ரஹ சரித்ரத்தையும் இயற்றியவர்.
தஞ்சையை ஆண்ட முதலாம் துளஜா மஹாராஜரின் அரசவைப் பண்டிதர்.
.
ஒரே இரவில் க்ருஷ்ணமிச்ரரின் ப்ரபோதசந்த்ரோதயம் நாடகத்திற்கு உரை எழுதினாராம் கனச்யாம பண்டிதர்.
வித்தசாலாபஞ்சிகா என்ற நாடகத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை என்னும் உரையை மூன்றே மணி நேரத்தில் எழுதித் தள்ளிவிட்டாராம் ..
இவருக்கு தமையன் ஒருவர்... அவர் ஸந்யாசியாகி, சிதம்பரகுரு என்ற நாமம் தாங்கி தேவீ பட்டணத்தில் இருந்தாராம் ..
கனச்யாம பண்டிதரின் மனைவியர் இருவர் ஸுந்தரீ , கமலா என்பார்.
மூன்றே மணி நேரத்தில் தம் கணவர் எழுதிய உரையை அநுஸரித்து, பண்டிதரின் மனைவியர் ஸுந்தரியும், கமலாவும் சேர்ந்தே மற்றோரு உரையையும் பிற்பாடு எழுதிப் பெரும் புகழ் பெற்றனராம்..
கனச்யாமரின் புதல்வர் சந்த்ரசேகரரும் தகப்பனாரைப் போன்றே பெரும் புலமை வாய்ந்தவரே..
..மீண்டும் சொல்லுவோம்....
Subscribe to:
Posts (Atom)