எசமான்....ஸ்ரீபுதுப்பெரீவா அவர்களின் விஜய யாத்ரையின் பாங்கு அலாதியானது..
அதிகாலையில் ஸ்ரீமடம் முகாமில் இருப்போர் உறக்கம் கலைந்து எழும் முன்னர் எசமான் எழுந்து விடுவார்கள்.. காலை 5மணிக்கு என்றால் 4.30க்கு வெளியில் வந்துவிடுவார்கள்.. யார் உடனிருந்தாலும் இல்லாவிட்டாலும் நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்..
கரடு முரடான வழிகளிலும் பல சமயங்களிலும் பாதுகை அணியாமல் மிக வேகமாக நடப்பார்கள்.. பணியாட்கள் தொடர முடியாத அளவிற்கு நடையில் வேகம் இருக்கும்..
ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமி அம்பாள் இருக்கும் பேழைகள் மட்டும் ஜாக்ரதையாக எடுத்து வரப்படுகின்றனவா என்பதில் கவனத்துடன் இருப்பார்கள்..
கடும் மழைப் பொழிவினிடையே அவர்கள் மேற்கொண்ட மேற்குக் கடற்கரையோர யாத்ரை மிகக் கடுமையான ஒன்று....
கடலோரமாக பல நூறு மைல்கள் நடந்தே தென் கேரளத்தை அடந்தார்கள்
ஏராளமான பரிஜனங்களுடன் அவர்கள் கால்நடையாகவே செய்த ஹிமாலய யாத்ரை மனதாலும் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று..
பத்ரிநாதத்தில் கடுங்குளிரில் சாதுர்மாஸ்யம்..
ஸ்ரீசந்த்ரமௌளீச்வர ஸ்வாமிக்கு நிதானமாக ஸ்ரீருத்ரபாரயணத்துடன் வலது திருக்கரத்தை மாற்றாமல் வழக்கம் போல பாலபிஷேகம் செய்கிறார்கள்..
அபிஷேக சமயத்தில் சிறிது சிறிதாகக் கை மரத்துப் போகிறது..
அபிஷேகம் நிறைவடையும்போது திருக்கரம் முழுமையும் மரத்துப் போன நிலையில்.. திரை போடும் வரையில் பக்தர்கள் அறியாவண்ணம் வழக்கம் போலிருந்து விட்டு.. பின் ஆசாரத்திற்குப் பங்கமில்லாமல்..
தம் திருக்கரத்தில் அழுத்தமான சிறு கம்பளியைச் சுற்றிக்கொண்டு ஸ்வாமிக்கென வைத்திருந்த கனன்று கொண்டிருந்த தணலில் அப்படியே காட்டியிருந்து விட்டு.. திரையை விலக்கும் முன் தமது மரத்த திருக்கரத்தின் உதிர ஓட்டத்தைச் சரியாக்கிக் கொண்டு பூஜையைத் தொடர்வார்கள்..
தம் திருக்கரத்தில் அழுத்தமான சிறு கம்பளியைச் சுற்றிக்கொண்டு ஸ்வாமிக்கென வைத்திருந்த கனன்று கொண்டிருந்த தணலில் அப்படியே காட்டியிருந்து விட்டு.. திரையை விலக்கும் முன் தமது மரத்த திருக்கரத்தின் உதிர ஓட்டத்தைச் சரியாக்கிக் கொண்டு பூஜையைத் தொடர்வார்கள்..
ஒருசமயம் அவர்களுக்குக் கடுமையான ஜுரம்.. எழுந்து அமரக்கூட இயலாத நிலை.. அப்போதும் மூன்று வேளையும் ஸ்நாநம் பண்ணிவிட்டு பிறர் யாரும் அறியாவண்ணம்.. அப்படியே தவழ்ந்து வந்து ..ஆசனத்தில் மெதுவாக ஏறியமர்ந்து ...
ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரீ ஸமேத சந்த்ரமௌளீச்வர ஸ்வாமிக்கு மூன்று கால பூஜையும் செய்து முடித்தார்கள்..
ஸ்ரீமஹாத்ரிபுரசுந்தரீ ஸமேத சந்த்ரமௌளீச்வர ஸ்வாமிக்கு மூன்று கால பூஜையும் செய்து முடித்தார்கள்..
வந்திருந்த பக்தர்கள் யாரும் தாம் படும் சரீர ச்ரமத்தை அறிந்து கொண்டு விடக்கூடாது என்பதில் கவனமாயிருப்பார்கள்..
எப்பேர்ப்பட்ட ச்ரமம் வந்தபோதும் புன்முறுவல் பூத்தபடியே இருப்பார்கள்..
இந்தப் படங்களைப் பார்க்கும்போது.. இப்படி எத்தனையோ யாத்ரை நிகழ்வுகள் மனதுள் விரிகின்றன....
படங்கள் : ஹரிஹரன்
படங்கள் : ஹரிஹரன்