Wednesday, December 21, 2016

ஸ்ரீஸார் டயரிக் குறிப்புகள்..3






1986ம் வருஷம்  கார்த்திகை இரண்டாம் சோமவாரத்தன்று  முன்னிரவில்..

ஸ்ரீபெரீவா அவர்கள் 

" முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. "


என்னும் திருவாசகம் அச்சோப் பதிகப்  பாடலில்  உள்ள 
 " சித்தமலம் அறிவித்து  சிவமாக்கி " 
என்பதன்   பொருளைக் குறிப்பிட்டு  நிறைவில் 

"ஆயுஸுக்கும்  த்யாகராஜாவையே நினைச்சிண்டிரு.." 
என்று மீளாஅடிமைக்கு  உத்தரவாயிற்று  ..

*******

பின்னர்  1991ம் வருஷம் ஸத்குரு ஸ்ரீசிவன் சார் அவர்கள் உத்தரவு பெற்று  பரீக்ஷைக்கு படிக்க  திருவாரூருக்குக் கிளம்பிய சமயம்  ஸ்ரீஸார்  அவர்கள்  ஆரூரனுக்குச் சொல்லியனுப்பியது .

"ஸந்த்யாகாலம்  கமலாலயத்திற்குப் போ.. ஸந்த்யாவந்தனம் பண்ணு .. 
ஸாயரக்ஷை  முடிஞ்சப்பறம் .. தியாகராஜஸ்வாமி   சன்னதிக்குப்   போ.. 
நேராக  நிற்காமல்..  கொஞ்சம் ஒதுங்கி நின்னு .. 

 " ஸ்வாமீ .. எனக்கு மந்த்ரம் தெரியாது ..  
பூஜை தெரியாது.. 
ஒண்ணுமே  தெரியாது.. 
ஒரு யோக்யதையும் கிடையாது.. 
நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்னு 
எங்க  குரு   சிவன் ஸார்  
என்னை ஸ்வாமி உங்க கிட்டே அனுப்பினார்னு.. 

ரெண்டு கையையும் முன்னாடி நீட்டி மத்தவா யாருக்கும் கேட்காதபடி .. பவ்யமா..  ஸ்வாமியிடம்   சொல்லுப்பா ..
மத்ததை ஸ்வாமி  பார்த்துப்பார்.. ! "




Monday, December 12, 2016

மழைக்கோள் : சூடாமணி உள்ளமுடையான்



சுக்ரனின் இயக்கத்தால் மழை நிலையை அறிந்து கொள்ள இயலும் ..
சூடாமணி உள்ளமுடையான் என்னும் தமிழ் ஜ்யோதிஷ நூல் சுமார் எட்டு நூற்றாண்டுகள் பழமையானது.. இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்துள்ளது.
இதை " வென்பதைக்குடி நாட்டு ப்ரமதேயம் பாண்டமங்கலம் பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்தினரான ஹரியின் புதல்வர் திருக்கோட்டியூர் நம்பி " என்பார் தமிழில் 1178ம் ஆண்டில் மொழிபெயர்த்துள்ளனர்.
"உள்ளமுடைச் சூடாமணிச் சோதிட நூல் " என்று வரும் குறிப்பே பிற்காலத்தில் சூடாமணி உள்ளமுடையான் என்று இந்நூலின் பெயராயிற்று...
ஜ்யோதிஷ சாஸ்த்ரக் களஞ்சியமாகத் திகழும் சூடாமணி உள்ளமுடையானில் 279ம் பாடல் சுக்ர சரிதை தொடர்புடையது ..
" கொடுஞ்சிலைவேள்
துவலை தோன்றில் துளியாய்ப் போம் சுறாவும் குடமும் துடர்மீனும் 
நவையில் வெள்ளி நின்றிடுமேல் நாளும் நாளும் மழை பெரிதாம். "
இந்தப் பாடலின்படி சுக்ர க்ரஹம் தநுஸு ராசியில் நிற்கும்பொழுது மழை தோன்றத் துளியாய்ப் போகும்.
மகரம் முதலான மூன்று ராசிகளில் நிற்கும்பொழுது நாளும் நாளும் அடைமழை பெய்யும் .

இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதிக்குப் பிறகு அசுரர் குருவின் பெயர்ச்சியால் மழை தோன்றிப் பிற்பாடு மிகும் என்று பொட்டி ஜோஸ்யர் சொன்னதும் உள்ளமுடையான் பாடலின் அடிப்படையில்தான் ..