Monday, December 12, 2016

மழைக்கோள் : சூடாமணி உள்ளமுடையான்



சுக்ரனின் இயக்கத்தால் மழை நிலையை அறிந்து கொள்ள இயலும் ..
சூடாமணி உள்ளமுடையான் என்னும் தமிழ் ஜ்யோதிஷ நூல் சுமார் எட்டு நூற்றாண்டுகள் பழமையானது.. இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்துள்ளது.
இதை " வென்பதைக்குடி நாட்டு ப்ரமதேயம் பாண்டமங்கலம் பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலத்தினரான ஹரியின் புதல்வர் திருக்கோட்டியூர் நம்பி " என்பார் தமிழில் 1178ம் ஆண்டில் மொழிபெயர்த்துள்ளனர்.
"உள்ளமுடைச் சூடாமணிச் சோதிட நூல் " என்று வரும் குறிப்பே பிற்காலத்தில் சூடாமணி உள்ளமுடையான் என்று இந்நூலின் பெயராயிற்று...
ஜ்யோதிஷ சாஸ்த்ரக் களஞ்சியமாகத் திகழும் சூடாமணி உள்ளமுடையானில் 279ம் பாடல் சுக்ர சரிதை தொடர்புடையது ..
" கொடுஞ்சிலைவேள்
துவலை தோன்றில் துளியாய்ப் போம் சுறாவும் குடமும் துடர்மீனும் 
நவையில் வெள்ளி நின்றிடுமேல் நாளும் நாளும் மழை பெரிதாம். "
இந்தப் பாடலின்படி சுக்ர க்ரஹம் தநுஸு ராசியில் நிற்கும்பொழுது மழை தோன்றத் துளியாய்ப் போகும்.
மகரம் முதலான மூன்று ராசிகளில் நிற்கும்பொழுது நாளும் நாளும் அடைமழை பெய்யும் .

இந்த ஆண்டு நவம்பர் 14ம் தேதிக்குப் பிறகு அசுரர் குருவின் பெயர்ச்சியால் மழை தோன்றிப் பிற்பாடு மிகும் என்று பொட்டி ஜோஸ்யர் சொன்னதும் உள்ளமுடையான் பாடலின் அடிப்படையில்தான் ..

1 comment:

  1. மழை, வர்தா புயல் சேதம் அதிகம்! இவ்வாண்டு கடைசியிலும் 2017யிலும் மழை எப்படி என்று பொட்டி ஜோஸ்யரிடம் கேட்டுச் சொல்லவும்!

    ReplyDelete